இன்றும் தொடரும் ரயில் சாரதிகளின் போராட்டம் : ஸ்தம்பிதம் அடையும் சேவைகள்!

பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (06) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட ரயில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என புகையிரத சாரதிகள் குழுவொன்று அறிவித்துள்ளது.
இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், ஆட்சேர்ப்பு தாமதம் உள்ளிட்ட பல பிரச்சனைகளின் அடிப்படையில் அவர்கள் இந்த தொழில் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
ஐந்து புகையிரத நிலையங்களில் இரண்டின் சாரதிகள் மாத்திரமே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மின்சார ரயில் இயங்காது எனவும் லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், 84 ரயில் சாரதிகளின் பதவி உயர்வு பிரச்சினையின் அடிப்படையில் அந்த சாரதிகள் மாத்திரமே இந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்சார் நடவடிக்கையானது லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் நிர்வாகக் குழுவினால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல, சங்கத்தின் செயலாளர் எடுத்த முடிவின்படி வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது என்று சங்கத்தின் தலைவர் சந்தன லால் தெரிவித்தார்.



