தியாகியின் மகளின் பிறந்தநாளையொட்டி உதவித் தொகைகள் வழங்கி வைப்பு!

தியாகி அறக்கொடை நிறுவனரும் TCT யின் முதலாளியுமாகிய தியாகேந்திரன் வாமதேவா (தியாகி) ஆவர்களினால் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள TCT வளாகத்தில் பல்வேறு வகையான உதவித் தொகைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தியாகி அவர்களுடைய மகளின் பிறந்தநாளை முன்னிட்டு குறித்த உதவிகள் இன்று காலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சிறுநீரக பாதிப்பிற்கு உட்பட்டவர்கள் மற்றும் வயோதிபர்க்ளுக்கு பத்தாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது. அத்தோடு பல்வேறு தரப்பினரும் வந்து தியாகியிடம் உதவிகள் பெற்று சென்றுள்ளனர்.
வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் மாணவர்கள் என பல தரப்பட்ட வறிய மக்களும் வந்து உதவிகளை பெற்று சென்றுள்ளனர்.
இதேவேளை தியாகி ஐயாவின் மகளின் பிறந்தநாளினை முன்னிட்டு பலாலியிலுள்ள கிராமம் ஒன்றில் உள்ள மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கான கணித பாடம் மற்றும் கணனி வகுப்புக்களும் இலவசமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.



