ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம்!
#SriLanka
#Sri Lanka President
#Election
Mayoorikka
1 year ago

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில் கட்சிக்குள் ஆட்சேபனை இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து கட்சி இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை எனவும் தெரிவித்தார்.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனைத்து பிரச்சினைகளையும் முடித்துக் கொண்டு, கிராம மட்டத்தில் கட்சியை மீண்டும் பலப்படுத்தி எதிர்வரும் தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



