கொக்குத் தொடுவாய் புதைகுழியை பார்வையிட்ட ஐநா வதிவிட பிரதிநிதி!

#SriLanka #UN #Mullaitivu
Mayoorikka
1 year ago
கொக்குத் தொடுவாய் புதைகுழியை பார்வையிட்ட ஐநா வதிவிட பிரதிநிதி!

இலங்கைக்காக ஐநாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை இன்று மேற்கொண்டுள்ளார். 

 வடக்குக்கு விசேட பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ள ஐநா வதிவிடப் பிரதிநிதி இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வரும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கும் சென்று பார்வையிட்டுள்ளார். 

இதன்போது முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் இந்த புதைகுழி வழக்கை முன்னெடுத்து வரும் சட்டத்தரணிகளில் ஒருவரான கணேஸ்வரன் ஆகியோர் புதைகுழி அமைந்துள்ள பகுதியில் ஐநாவின் வதிவிடப் பிரதிநிதிக்கு நிலைமைகளை தெளிவுபடுத்தினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!