சஜித் பிரேமதாசவுடன் எந்த நேரத்திலும் விவாதம் நடத்த தயார் : அனுர தரப்பு தெரிவிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இன்று (06.05) எந்த நேரத்திலும் விவாதம் நடத்த அனுரகுமார திஸாநாயக்க தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று அவர் கூறுகிறார்.
இன்றைக்கு பின்னர் கட்சியின் தலைவர்களுக்கு இடையில் விவாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கவில்லை என நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறியுள்ளார்.
இது தொடர்பில், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் வரையில் இந்த விவாதங்களுக்கு தமது கட்சி தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.