ஹம்பாந்தோட்டையில் கொலையில் முடிந்த மாணவர்களின் முரண்பாடு!

ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிப்பிக்குளம பகுதியில் இரு பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு கொலையில் முடிவடைந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளாகி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஹம்பாந்தோட்டை, பத்தேவெல வீதியில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை நகரிலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் இவர், நேற்று சிப்பிக்குளம பிரதேசத்திற்கு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
அங்கு ஹம்பாந்தோட்டையில் உள்ள மற்றுமொரு பாடசாலையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சம்பந்தப்பட்ட துணை வகுப்புக்கு அருகில் சென்று 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனை தாக்கியுள்ளார்.
இரு மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே மோதலுக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும் மாணவியின் மரணம் தொடர்பில் 17 வயதுடைய பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



