வேறு ஒருவரின் விசாவை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்டவர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
வேறு ஒருவரின் விசாவை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்டவர் கைது!

வேறு ஒருவரின் விசாவைப் பயன்படுத்தி  கனடாவிற்கு  தப்பிச் செல்ல வந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

சந்தேக நபர் தனது விமான அனுமதியை முடித்துவிட்டு குடிவரவு கவுன்டருக்கு வந்து தனது கடவுச்சீட்டை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.  

சம்பந்தப்பட்ட கடவுச்சீட்டில் உள்ள புகைப்படமும் அவரது புகைப்படமும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பதால், இந்தக் கடவுச்சீட்டைப் பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறிய குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் அதன் தகவல்கள் உள்ளிடப்பட்டுள்ளன. 

இதன்படி, இந்த கடவுச்சீட்டை வைத்திருப்பவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து திருகோணமலை நீதிமன்றம் விமானப் பயணத் தடை விதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!