மின்சார கட்டணத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
மின்சார கட்டணத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பு!

மின்சார கட்டணத்தில் உச்சநீதிமன்றம் சமர்ப்பித்த அனைத்து திருத்தங்களையும் ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் நேற்றைய (04.06) தினம் பிரதேச மேற்பார்வைக் குழுவிற்கு அறிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டதாக அமைச்சர் மேலும் கூறினார்.  

எனவே, இந்த சட்டமூலத்தில் வேறு எந்தத் திருத்தங்களையும் அரசாங்கம் முன்வைக்காது என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை அல்ல என்றும், அந்த சரத்துகள் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையினால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் ஒவ்வொரு சரத்தும் பொது வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.  

குறித்த சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் கருத்தை முன்வைத்த சபாநாயகர், உரிய சரத்துக்களை திருத்தினால் பாராளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!