கடல் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்!

#SriLanka #Mannar
Mayoorikka
1 year ago
கடல் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்!

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதை சற்று நிறுத்திக் கொண்டால் உங்களுடன் பேசுவதற்கும் ,இப்பிரச்சினையை இலகுவாக முடித்துக் கொள்வதற்கும் இரு தரப்பும் விட்டுக்கொடுப்புடன் பேசுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

 -மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று புதன்கிழமை(5) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்,,, தமிழக மீனவர்களின் தடை காலம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகிறது.அதனை தொடர்ந்து அவர்கள் தடை செய்யப்பட்ட இழுவை மடி தொழிலை எமது கடற்பரப்பில் நுழைந்து முன்னெடுக்கவுள்ளனர்.

 குறித்த அத்து மீறிய நடவடிக்கை குறித்து நாங்கள் கடந்த காலங்களில் தொடர்ந்தும் விழியுறுத்தி வருகின்ற விடையம் அவர்களின் வருகையை கட்டுப் படுத்தவதாகவே அமைந்துள்ளது. இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அரசின் நடவடிக்கைக்கு வடபகுதி மீனவர்களாகிய நாங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம். எமது கடல் வளத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.

அந்த வகையில் நாங்கள் மீண்டும் ஒரு அறை கூவலை விடுக்கின்றோம். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதை நிறுத்துங்கள்.இவ்வாறு நிறுத்திக் கொண்டால் உங்களுடன் பேசுவதற்கும் ,இப்பிரச்சினையை இலகுவாக முடித்துக் கொள்வதற்கும் இரு தரப்பும் விட்டுக்கொடுப்புடன் பேசுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

 விட்டுக்கொடுப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது உங்கள் நடவடிக்கையை பொறுத்துள்ளது. இலங்கை அரசிற்கு நாங்கள் வலியுறுத்துவது வடபகுதி கடற்பரப்பில் குறிப்பாக இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் உள்நுழைவதை கட்டுப்படுத்த கடல் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். எங்களுடன் கலந்தாலோசித்து உரிய தீர்வை எடுக்க முடியும்.என தெரிவித்தார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!