மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ள ஆசிரியர்கள்!

#SriLanka #strike #Teacher
Mayoorikka
1 year ago
மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ள ஆசிரியர்கள்!

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.

 நிதி அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி, தமது உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் எதிர்வரும் 12ம் மற்றும் 26ம் திகதிகளில் போராட்டத்தை நடாத்தவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 அடுத்த ஆண்டு பாதீட்டு திட்டத்தின் ஊடாக அரச பணியாளர்களின் வேதன பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார். எனினும், அதிபர் - ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் வேதன அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!