வெள்ளத்தை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த அமைப்புகள் - பிரமித்த பண்டார சுட்டிக்காட்டு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
வெள்ளத்தை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த அமைப்புகள்  - பிரமித்த பண்டார சுட்டிக்காட்டு!

வெள்ளத்தைத் தடுப்பதற்கு அரசாங்கம் நிரந்தரத் தீர்வுகளை முன்வைத்துள்ளதை சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், சுற்றுச்சூழல் அமைப்புகளாலும் சில அரசியல்வாதிகளாலும் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

தெற்கு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக்கு நிரந்தர தீர்வு காணுமாறு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இன்றைய நிலவரப்படி 33,422 குடும்பங்களைச் சேர்ந்த 130,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!