மண்மேடு சரிந்து விழுந்ததில் 03 வயது குழந்தை பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கேகாலை பிரதேசத்தில் மண் மேட்டின் கீழ் விழுந்து சிறு குழந்தையொன்று துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளது.
03 வயது குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தையின் வீட்டின் பின்புறம் பாதுகாப்பு சுவர் கட்டுவதற்காக இன்று காலை பள்ளம் வெட்டப்பட்டது.
குழந்தை வாய்க்காலில் இருந்தபோது, அதற்கு மேல் இருந்த மண் அடுக்கு குழந்தை மீது சரிந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அப்போது அங்கு வந்த மக்கள் குழந்தையின் மீது விழுந்த மண்ணை அகற்றி உடனடியாக கேகாலை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் குழந்தை உயிரிழந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.