மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பிய செய்தி என்ன?
#SriLanka
#Ranil wickremesinghe
#D K Modi
Mayoorikka
1 year ago
இந்தியாவின் பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி நரேந்திர மோடி, மூன்றாவது முறையாகவும் ஆட்சி அமைக்க போவதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மூன்றாவது முறையாகவும் வெற்றியை தன்வசப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் இந்திய மக்கள் வெளிப்படுத்திய நம்பிக்கையை ஜனாதிபதி அங்கீகரித்ததோடு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் தொடர்ச்சியான வளர்ச்சியில் நம்பிக்கை வைக்கின்றேன்,” என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.