கனமழையால் பாதிக்கப்பட்ட விளைச்சல் : கவலை தெரிவிக்கும் விவசாயிகள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

மழை காரணமாக தர்பூசணி செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தொட்டியடி பிரதேசத்தில் இம்முறை விவசாயிகளால் தர்பூசணி செய்கையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த தர்பூசணி அழுகி அழிவடைந்துள்ளது.
இதனால் பல இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.



