வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிவாழ் மக்களுக்கு வழிகாட்டுதல் வெளியீடு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு சுகாதார மேம்பாட்டு பணியகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
காயங்களை ஏற்படுத்தக்கூடிய தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் குப்பைகள் இருக்கலாம் என்பதால் வெள்ள நீரில் நடப்பதையோ நீந்துவதையோ தவிர்க்க வேண்டும் என்றும் அது கூறுகிறது.
மேலும், வெள்ளத்தின் ஊடாக பயணிக்கும் போது லெப்டோஸ்பிரோசிஸ் அல்லது எலிக்காய்ச்சல் போன்ற தொற்றுக்களை தடுக்க இயன்றவரை இறப்பர் பூட்ஸ் மற்றும் கையுறைகளை அணிய முயற்சிக்குமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.



