சீரற்ற வானிலை - பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

#SriLanka #weather #Disaster
Mayoorikka
1 year ago
சீரற்ற வானிலை - பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (04) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போது, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 சீரற்ற வானிலை காரணமாக 41 பேர் காயமடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 23 மாவட்டங்களின் 262 பிரதேச செயலகப் பிரிவுகளில் 33,422 குடும்பங்களைச் சேர்ந்த 130,021 பேர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 அந்த பிரதேசங்களில் அரசாங்கத்தினால் நடத்தப்படும் 116 பாதுகாப்பு நிலையங்களில் 2,368 குடும்பங்களைச் சேர்ந்த 9,248 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!