இன்று குறைக்கபடவுள்ள லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள்
#SriLanka
#prices
#Litro Gas
Prasu
1 year ago

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.
12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க, 3940 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,790 ரூபாவாகும்.
5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,522 ரூபா என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க, அதன் புதிய விலை 712 ரூபாவாகும்.



