ஜனாதிபதி செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் மோதல்: ஒருவர் வைத்தியசாலையில்

#SriLanka #Attack
Mayoorikka
1 year ago
ஜனாதிபதி செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் மோதல்: ஒருவர் வைத்தியசாலையில்

ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஸ காயமடைந்துள்ளார்.

 இவ்வாறு காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஸ இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஸவின் கால் எலும்பில் முறிவொன்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (03) மாலை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதன்போது, கண்டி மாவட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விடயத்தை முன்னிலைப்படுத்தி, பாராளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ஸவிற்கும், மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 இவ்வாறு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை, பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம தலையிட்டு சமரசம் செய்துள்ளார். இந்த நிலையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டம் முடிவடைந்துள்ளது. இதையடுத்து, கூட்டம் நடைபெற்ற அறையிலிருந்து வெளியேறிய போது பாராளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ஸவிற்கும், மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் வலுப்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமவினால், குணதிலக்க ராஜபக்ஸ தள்ளப்பட்ட நிலையில், குணதிலக்க ராஜபக்ஸ தவறி படியிலிருந்து கீழே வீழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

 இந்த சம்பவத்தில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஸ, உடனடியாக இராணுவ வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந் நிலையில், தனக்கும், பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஸவிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட போதிலும், தான் அவரை தள்ளிவிடவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

 இருவருக்கும் இடையில் வாக்குவாதம் வலுப்பெற்றதை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ர, பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஸவை அழைத்து செல்ல முற்பட்ட போது, அவர் தவறி வீழ்ந்துள்ளதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!