போராட்டத்தில் ஈடுபடும் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் வெளியிட்ட அறிவிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
தமது தொழிற்சங்க நடவடிக்கையின் எதிர்காலம் தொடர்பில் இன்று (04.06) இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த, உயர்கல்வி இராஜாங்க அமைச்சருடன் நேற்று (03.06) விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக குறிப்பிட்டார்.
அக்கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்று தமது தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.