வெள்ளத்தை வேடிக்கை பார்த்தவர்களுக்கு நேர்ந்தக் கதி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

வெள்ளத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 4 பேர் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களில் மூவர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டதாகவும் ஒருவர் காணாமல் போனதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் அங்குருவத்தோட்ட, உடுவர கரந்தவதுகொட பிரதேசத்தில் நேற்று (03.06) மாலை பதிவாகியுள்ளது.
நிவிவேதல் வத்த, நெபாடா பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே காணாமல் போயுள்ளார்.
காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்க பிரதேசவாசிகளும் அங்குருவத்தோட்ட பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.



