ஐ.நா. சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி யாழில் பல்வேறு தரப்பினரையும் சந்திப்பு!

#SriLanka #Jaffna
Mayoorikka
1 year ago
ஐ.நா. சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி யாழில் பல்வேறு தரப்பினரையும் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ்ப்பாண மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (02) விஜயம் செய்ததுடன் பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டார்.

 நல்லை ஆதீனத்துக்குச் சென்ற ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஆதீன குரு முதல்வர் ஸ்ரீ ஸ்ரீ சோமசுந்தர பரம்மாச்சார்ய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

 இந்த சந்திப்பில் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், கோப்பாய் சுப்பிரமணிய கோட்டத்தின் தலைவர் ரிஷி தொண்டுநாத சுவாமிகள் கலந்துகொண்டார்கள்.

 அதனை தொடர்ந்து, நல்லூர் கந்தசுவாமி கோவிலும் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு சென்று, பார்வையிட்டதுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார். மேலும், இந்தியா - இலங்கை இடையேயான பாக்கு நீரிணையை கடந்த சிறுவன் தன்வந்தை சந்தித்து பாராட்டுகளையும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!