சீரற்ற காலநிலையில் சிக்கி 07 பேர் உயிரிழப்பு!

கடந்த 24 மணித்தியாலங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சுகாதார அமைச்சு அனைத்து மாகாண சுகாதார பணிப்பாளர்களையும் விழிப்புடன் இருக்குமாறும், மக்களின் பாதுகாப்பையும் மருத்துவமனைகளின் சுமூகமான செயல்பாட்டையும் உறுதிப்படுத்த தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் பணித்துள்ளது.
தென்மாவட்டத்தில் நிலவும் காலநிலையின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு தற்போது மாத்தறை பிரதேசத்தில் ஆய்வு விஜயத்தில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
மேலும் சிகிச்சைக்காக ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை விமானத்தில் ஏற்றிச் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன,” என்றார்.
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.



