சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு : தாமதப்படும் ரயில் சேவைகள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு : தாமதப்படும் ரயில் சேவைகள்!

பல்லேவெல மற்றும் கனேகொட புகையிரத நிலையங்களுக்கும் வயங்கொட மற்றும் கம்பஹா புகையிரத நிலையங்களுக்கும் இடையில் சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான பாதையில் புகையிரத தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எங்கள் விசாரணையில், ரயில்வே துணைப் பொது மேலாளர் ஜெ. என். இண்டிபோலகே இதனைத் தெரிவித்தார்.  

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக பிரதான வீதி, கரையோர வீதி மற்றும் புத்தளம் வீதிகள் பல இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சில ரயில்கள் தாமதமாக வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பல நிலையங்களில் புகையிரத பாதையில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் புகையிரத ஓட்டம் தடைப்பட்டுள்ளதாக திரு.இண்டிபோலகே தெரிவித்தார். 

வாக மற்றும் கொஸ்கம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளமையினால் களனிவெளி பாதையில் இயங்கும் புகையிரத சேவை வாகா புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!