வவுனியாவில் பொலிஸ் காவலில் இருந்த நபர் தப்பியோட்டம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
தலைமன்னார் பொலிஸ் பிரிவில் கடந்த 02 ஆம் மாதம் 09 வயது சிறுமி ஒருவரை வன்புணர்வு செய்து கொலை செய்த நபர் ஒருவர் பொலிஸ் காவலில் இருந்து தப்பியோடியுள்ளார்.
அதன்படி வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கந்தையா விஜயன் என்ற அப்துல் ரஹ்மான் என்ற சந்தேக நபர் தொடர்பில் தகவல் ஏதேனும் தெரிந்தால் 0718591364 அல்லது 0718591370 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.