சீரற்ற வானிலையால் வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
சீரற்ற வானிலையால் வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!

நெலுவ வைத்தியசாலைக்கான அனைத்து நுழைவு வீதிகளும் நீரில் மூழ்கியுள்ள நிலையில், காலி, நெலுவ வைத்தியசாலையில் அவசர சிகிச்சை தேவைப்படும் அனைத்து கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோயாளிகளை விமானம் மூலம் உடுகம வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

காலி மாவட்ட சமூக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அமில சந்திரசிறி இந்த தகவலை அறிவித்துள்ளார். 

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக தவலம, நெலுவ, உடுகம மற்றும் ஹினிதும ஆகிய பகுதிகளில் படகுகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தின் நிவாரணக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காலியின் பதில் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!