வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த சிகரெட் கையிருப்பின் பெறுமதி 3,840,000 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது. 

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்த வர்த்தகர் நேற்று (31.05) இரவு 10:00 மணியளவில் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK-648 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். 

38,400 சிகரெட்டுகள் அடங்கிய 192 சிகரெட் பொதிகள் அவரது பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!