யாழ்-சங்கானையில் போதைப்பொருள் பாவனையை எதிர்த்து போராட்டம்

#SriLanka #Jaffna #Protest #Abuse #drugs
Prasu
2 years ago
யாழ்-சங்கானையில் போதைப்பொருள் பாவனையை எதிர்த்து போராட்டம்

சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான போராட்டம் சங்கானை பேருந்து நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'அழகான இளைஞர்களின் உடல் அழகையும் முகத்தின் வசீகரத்தையும் சிதைக்கும் போதைப்பொருள் பாவனைக்கு ஏமாறமாட்டோம்', என தெரிவித்தனர்.

மேலும் 'எமது பிள்ளைகளை புகையிலைக் கம்பனிகளிடமிருந்து பாதுகாக்க அனைவரும் அணிதிரள்வோம்', 'புகைப்பதால் உன் அழகு புன்னகை இழக்கும்', 'உடலை உருக்கும் சிகரெட் பாவனை எதற்கு?', 'சினிமாவில் புகைப்பதை பார்த்து உன் கல்வியை அழிக்காதே' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பினர்.

images/content-image/cd/1717140938.jpg

வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் நிர்வாகத்தினர், அங்கத்தவர்கள், சங்கானை பிரதேச செயலக பிரதேச செயலர் கவிதா உதயகுமார், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

images/content-image/1717140953.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4