அமெரிக்காவில் கின்னஸ் சாதனை படைத்த காளை

#America #WorldRecord #Animal
Prasu
1 year ago
அமெரிக்காவில் கின்னஸ் சாதனை படைத்த காளை

உலகம் முழுவதும் சமீபகாலமாக சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் தங்களது திறமைகளால் பல்வேறு வகைகளில் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர்.

இந்நிலையில் உலகின் மிக உயரமான காளை என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்காவில் உள்ள ஒரு காளை படைத்துள்ளது. 

அங்கு ஓரிகானில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் வசிக்கும் ரோமியோ என பெயரிடப்பட்ட இந்த காளை 6 அடி 4.5 அங்குலம் உயரம் கொண்டது. 

கின்னஸ் சாதனை அமைப்பின் அறிக்கைபடி இதற்கு முன்னர் இந்த சாதனை டாமி என்ற காளையிடம் இருந்தது. அதைவிட 3 அங்குலம் அதிக உயரத்துடன் தற்போது ரோமியோ புதிய சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து காளையின் உரிமையாளரான மிஸ்டி மூர் கூறுகையில், ரோமியோ காளைக்கு வாழைப்பழங்கள் மற்றும் ஆப்பிள் மிகவும் பிடிக்கும். 

தினமும் 45 கிலோ வைக்கோல் மற்றும் தானியங்கள் உட்கொள்கிறது. இந்த காளை வளர்ப்பதற்காகவே உயரமான தங்குமிட வசதிகள் தேவைப்படுகிறது என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!