ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்: காணி பத்திரங்களும் வழங்கவுள்ளார்

#SriLanka #Sri Lanka President #Jaffna #Ranil wickremesinghe
Mayoorikka
1 year ago
ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்: காணி பத்திரங்களும் வழங்கவுள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 3 நாட்கள் விஜயமாக இன்றையதினம்(24) வடமாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

 இந்நிலையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உரித்து தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமங்களை வழங்கி வைக்கவுள்ளார்.

 அதேவேளை கிளிநொச்சி வைத்தியசாலை, யாழ்.போதனா வைத்தியசாலை வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடத் தொகுதிகளையும் ஜனாதிபதி இதன்போது திறந்துவைக்கவுள்ளார். அத்தோடு, வடக்கில் இளைஞர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பொன்றிலும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 அதேவேளை வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இவ் விஜயத்தின்போது விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!