பண்டாரநாயக்க குடும்பத்துக்கு ஏற்பட்ட கதியே ராஜபக்சர்களுக்கும் ஏற்படும்!

#SriLanka #Sri Lanka President #Basil Rajapaksa
Mayoorikka
1 year ago
பண்டாரநாயக்க குடும்பத்துக்கு ஏற்பட்ட கதியே  ராஜபக்சர்களுக்கும் ஏற்படும்!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குபவரை தமது கட்சி எதிர்பார்த்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 அத்துடன், பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க மக்களாணையுடன் மீண்டும் ஆட்சியமைத்தால் பண்டாரநாயக்க குடும்பத்துக்கு ஏற்பட்ட அரசியல் கதியே ராஜபக்சர்களுக்கும் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்படும் என ரணில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தினால் அது ஜனாதிபதிக்கும், நாட்டுக்கும் பாதகமாக அமையும். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தொடர்ந்து வலியுறுத்திய போது, 113 உறுப்பினர்களின் ஆதரவை கையெழுத்துக்கள் ஊடாக உறுதிப்படுத்திக் கொண்டு வாருங்கள் நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.

 நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்கு பசில் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ரணில் பக்கமே உள்ளனர். அந்த கட்சியின் தலைவர் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!