மானிய வட்டி வீதத்தில் விசேட கடன் திட்டங்கள்! அரசாங்கம் அறிவிப்பு
#SriLanka
Mayoorikka
1 year ago
எதிர்வரும் வாரத்தில் இருந்து பல விசேட கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தொழில்துறையினருக்காக இந்த விசேட கடன் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் தொழில்துறையினரின் நிதித் தேவைகள் கண்டறியப்பட்டு, வணிக வங்கிகள் மூலம் மானிய வட்டி வீதத்தில் கடன் வழங்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.