கடக ராசியினருக்கு தடைபட்டிருந்த செயல்கள் நிறைவேறும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
5 months ago
கடக ராசியினருக்கு தடைபட்டிருந்த செயல்கள் நிறைவேறும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். சிலர் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பரணி: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கார்த்திகை 1: ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் உண்டான தடைகள் விலகும். உங்கள் முயற்சிகள் இன்று எளிதாக வெற்றியாகும். ரோகிணி: மனதில் குழப்பம் அதிகரிக்கும். பயணத்தில் சங்கடம் தோன்றும். கவனமாக செயல்படுங்கள். மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த பணம் வந்துசேரும். புதிய இடம் வாங்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறி உற்சாகம் அடைவீர்கள். முயற்சி வெற்றியாகும். திருவாதிரை: பயணத்தில் நிதானம் அவசியம். தேவையற்ற பிரச்னைகள் இன்று உங்களைத் தேடிவரும்.புனர்பூசம் 1,2,3: பழைய பிரச்னை ஒன்றுக்கு முடிவு கட்டுவீர்கள். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.

கடகம்

புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். திருமண வயதினருக்கு வரன் வரும்.பூசம்: வியாபாரம் செய்யும் இடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தோன்றும்.ஆயில்யம்: தடைபட்டிருந்த செயல்கள் நிறைவேறும். புதிய முயற்சி ஆதாயம் தரும்.

சிம்மம்

மகம்: வழிபாட்டை மேற்கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும். பூரம்: உங்கள் நீண்ட நாள் முயற்சி இன்று நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும். உத்திரம் 1: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும். தடைபட்டிருந்த வருவாய் வந்துசேரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். உறவினர்கள் மத்தியில் உங்கள் நிலை உயரும்.அஸ்தம்: வீண் குழப்பங்களுக்கு ஆளாவீர்கள். அத்தியாவாசிய செயல்களில் மட்டும் இன்று கவனம் செலுத்துங்கள். சித்திரை 1,2: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: கோயிலுக்கு செல்வீர்கள். செலவுகள் அதிகரித்தாலும் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். சுவாதி: வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த நன்மை ஏற்படாமல் போகும். உடலில் சோர்வு உண்டாகும்விசாகம் 1,2,3: புதிய இடம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: நன்மையான நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். எதிர்பாராத லாபம் உண்டாகும். அனுஷம்: வியாபாரத்தில் மாற்றம் செய்ய முயற்சிப்பீர்கள். நீங்கள் எதிர்ப்பார்த்த பணம் வருவதில் தாமதமாகும். கேட்டை: வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

தனுசு

மூலம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். பூராடம்: அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உத்திராடம் 1: வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சியில் சில தடைகளை சந்திப்பீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: இரண்டு நாட்களாக இருந்த சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.திருவோணம்: உங்கள் முயற்சியில் எதிர்ப்பாராத தடைகளை சந்திப்பீர்கள். செயல்களில் நெருக்கடி உண்டாகும். அவிட்டம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: சிந்தித்து செயல்படுவதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தேவையற்ற அலைச்சல் உண்டாகும்.சதயம்: சந்திராஷ்டமம் என்பதால் அமைதியாக இருங்கள். பிறரது பிரச்னைகளில் தலையிட வேண்டாம். பூரட்டாதி 1,2,3: முயற்சி இழுபறியானாலும் கடைசி நேரத்தில் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

மீனம்

பூரட்டாதி 4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் செயலை முடிப்பீர்கள். உத்திரட்டாதி: உங்கள் எதிர்ப்பார்ப்பு இழுபறியாகும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். அமைதி காக்க வேண்டிய நாள்.ரேவதி: செயல்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயத்தை ஏற்படுத்தும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!