தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தும் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு!

கோரிக்கைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தமது தொழில் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து தன்னார்வ சேவைகளிலிருந்தும் விலகுவதற்கு ஏகமனதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அதன் இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த தெரிவித்தார்.
குறிப்பாக, குடிநீர், மின்சாரம் வழங்குவதை முற்றிலுமாக நிறுத்துவோம்.மேலும், இணையதள வசதி வழங்குவதில் இருந்து முற்றிலுமாக விலகுவோம். இந்த செயலிழப்பால், பல்கலைக் கழகத்தில் பல விஷயங்கள் நின்றுவிடும்.மேலும், அரசு அதிகாரிகளே இதற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சகல ஊழியர்களும் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தி பணிக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.



