மூத்த பிரஜைகளின் சேமிப்பு வட்டி விகிதங்கள் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
மூத்த பிரஜைகளின் சேமிப்பு வட்டி விகிதங்கள் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

மூத்த பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 

மூத்த பிரஜைகளின் சேமிப்பிற்காக சுமார் 80 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பணத்திற்காக 105 பில்லியன் ரூபா திறைசேரியிலிருந்து கடனாக செலுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி இந்த விடயத்தில் மிகவும் சிரத்தையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் செயற்பட்டு வருவதாகவும் பல்வேறு வயதினருக்கான வட்டி விகிதங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற பல்வேறு கோரிக்கைகள் அனைத்தையும் அவர் கவனத்தில் எடுத்துக்கொள்வார் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

தற்போதைக்கு நாட்டில் நிலவும் பணப்புழக்கத்தை கவனித்து, அதற்கேற்ப தெளிவான அறிக்கையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!