மறைந்த தேமுதிக தலைவர் சார்பில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற பிரேமலதா விஜயகாந்த்
#India
#Death
#Actor
#President
#Award
#Politician
#Vijayakanth
Prasu
1 year ago
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்துக்கு டெல்லியில் குடியரசுத் தலைவரால் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
இவ்விருதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பெற்றுக் கொண்டார். இதுகுறித்து, திரையுலகினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பத்மபூஷன் விருதை பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "விருதை வாங்க கேப்டன் இல்லை என்பது மிகப்பெரிய வருத்தம்.
இருப்பினும் விஜயகாந்துக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அமைச்சர் அமித்ஷா வீட்டில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த விருந்தில் கலந்துகொள்ள உள்ளோம். தமிழ்சங்கத்தின் சார்பில் கேப்டனுக்கு நடைபெறவிருக்கும் பாராட்டு விழாவிலும் கலந்து கொள்ளவுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்