போதனா வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரனுக்கு இடமாற்றம்!

#SriLanka #Jaffna #Hospital
Mayoorikka
1 year ago
போதனா வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணர்  சிறீதரனுக்கு இடமாற்றம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய மகப்பேற்று வைத்திய நிபுணர் A.சிறீதரன் இன்று(03) முதல் அமுலாகும் வகையில் கொழும்பு டீ சொய்சா பெண்கள் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 இதேசமயம் மகப்பேற்று வைத்திய நிபுணர் J.கஜேந்திரன் புதிதாக யாழ் போதனா வைத்தியசாலையில் கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.

 எனவே, இதுவரை மகப்பேற்று வைத்திய நிபுணர் A.சிறீதரனின் பொறுப்பில் இருந்த விடுதியையும் அவருடைய கிளினிக் நோயாளர்களையும் மகப்பேற்று வைத்திய நிபுணர் S.சிறீசரவணபவா பொறுப்பேற்கவுள்ளார் என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

images/content-image/2024/05/1714727816.jpg

 இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இதுவரை மகப்பேற்று வைத்திய நிபுணர் S.சிறீசரவணபவா பொறுப்பில் இருந்த விடுதியையும் அவருடைய கிளினிக் நோயாளர்களையும் மகப்பேற்று வைத்திய நிபுணர் J.கஜேந்திரன் பொறுப்பேற்கவுள்ளார்.

 வைத்திய நிபுணர் சிறிதரன் கடந்த 18 வருடங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!