மேஷ ராசியினருக்கு உடல்நிலை குறித்து கவனம் தேவை - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 week ago
மேஷ ராசியினருக்கு உடல்நிலை குறித்து கவனம் தேவை - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். தடைபட்டிருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். பரணி: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவுகளால் ஆதாயம் காண்பீர்கள்.கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். ரோகிணி: செயல்களில் விழிப்பு தேவை. குறுக்கு வழியில் வரும் ஆதாயத்தினால் சட்ட ரீதியான சங்கடம் ஏற்படலாம்.மிருகசீரிடம் 1,2: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தடைகளை சந்திப்பீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று நிறைவேறும். நண்பர்களால் நன்மை உண்டாகும். திருவாதிரை: நீண்டநாள் முயற்சிகள் நிறைவேறும். வாழ்க்கைத்துணையால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புனர்பூசம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும்.

கடகம்

புனர்பூசம் 4: மறைமுக சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். செயலில் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். பூசம்: இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். நட்பு வட்டம் விரிவடையும். ஆயில்யம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும்.

சிம்மம்

மகம்: பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கலைப் பேசித் தீர்ப்பீர்கள். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விலகும்.பூரம்: விலகிச்சென்ற உறவினர்கள் உங்களைத் தேடிவருவார்கள். குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். உத்திரம் 1: பணியிடத்தில் உங்கள் செயல்களுக்கு பாராட்டு அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: உங்கள் முயற்சியில் போராடி வெற்றி அடைவீர்கள். வெளியூர் பயணத்தால் சிறு சங்கடங்கள் தோன்றும். அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தை சரி செய்வீர்கள். சித்திரை 1,2: வெளியூர் பயணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். மனதில் சோர்வு உண்டாகும்.

துலாம்

சித்திரை 3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.சுவாதி: சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். சொத்து வகையில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும்.விசாகம் 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நிதிநிலை உயரும்.

விருச்சிகம்

விசாகம் 4: வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.அனுஷம்: குடும்பத்தில் உண்டான குழப்பம் விலகும். திட்டமிட்டிருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள்.கேட்டை: பணியிடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு அதிகரிக்கும். வேலையில் இருந்த நெருக்கடி விலகும்.

தனுசு

மூலம்: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். மற்றவர் செய்யும் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம்.பூராடம்: மற்றவர்களால் உங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் போகும். மனதில் தேவையற்ற சிந்தனை வரும், உத்திராடம் 1: மனம் காட்டும் வழியில் செயல்படுவீர்கள். கடவுள் வழிபாடு நிம்மதியை ஏற்படுத்தும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வரவை விட செலவுகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் நிதானமும் கவனமும் தேவை. திருவோணம்: மற்றவர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அவிட்டம் 1,2: பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகலாம்.

கும்பம்

அவிட்டம் 3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். சதயம்: இடம் சம்பந்தமான பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். மூத்த சகோதரர் உங்கள் செயலுக்கு உதவியாக இருப்பார்.

மீனம்

பூரட்டாதி 4: தொழிலை விரிவு செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும்.உத்திரட்டாதி: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்துசேரும். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும்.ரேவதி: புதிய முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள்.