மகர ராசியினருக்கு நட்புகளால் நீண்டநாள் எண்ணம் பூர்த்தியாகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 week ago
மகர ராசியினருக்கு நட்புகளால் நீண்டநாள் எண்ணம் பூர்த்தியாகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: வியாபாரத்தில் உண்டான நெருக்கடிகள் விலகும். வருமானம் உயரும். பரணி: சூழ்நிலையைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். இயந்திரப்பணியில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்.கார்த்திகை 1: உங்களால் ஆதாயம் அடைந்தவர்கள் உங்களைத்தேடிவந்து உதவி செய்வார்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: மனம் சொல்வதைக்கேட்டு செயல்படுவீர்கள். நண்பர்கள் உதவியால் நினைத்தது நடந்தேறும்.ரோகிணி: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் உங்களைத்தேடி வருவார்கள்.மிருகசீரிடம் 1,2: உறவினர்கள் உதவியுடன் உங்கள் முயற்சி வெற்றியாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: சொத்து விவகாரம் பற்றி குடும்பத்தினருடன் பேசி தீர்வு காண்பீர்கள். திருவாதிரை: உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். புனர்பூசம் 1,2,3: எதிர்ப்புகள் விலகும். வியாபாரம் லாபமாகும். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும்.

கடகம்:

புனர்பூசம் 4: நீங்கள் ஈடுபடும் வேலையில் போராடி வெற்றி பெறுவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். பூசம்: பழைய பிரச்னை ஒன்றில் முடிவு காண்பீர்கள். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். ஆயில்யம்: உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: திட்டமிட்டு செயல்படுவீர்கள். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பூரம்: உங்களைச்சுற்றி இருப்பவர்கள் பற்றி தெரிந்துகொள்வீர்கள். அதிரடியாக ஒரு முயற்சியை மேற்கொள்வீர்கள். உத்திரம் 1: வேலைபளு அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: தடைகளைத்தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சகோதரர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.அஸ்தம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்துசேரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.சித்திரை 1,2: வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் முயற்சியில் இருந்த தடைகள் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு லாபமடைவீர்கள். சுவாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை நண்பர்கள் ஆதரவுடன் சரி செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாயை அடைவீர்கள். 

விருச்சிகம்

விசாகம் 4: மனக்குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். நண்பர்களால் முயற்சி நிறைவேறும்.அனுஷம்: அனைவரையும் அனுசரித்துச்செல்வீர்கள். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.கேட்டை: பொதுப் பிரச்னை ஒன்றில் துணிச்சலுடன் ஈடுபடுவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். 

தனுசு

மூலம்: மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும். பூராடம்: செயல்களில் எச்சரிக்கை அவசியம். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை.உத்திராடம் 1: பணியிடத்தில் வேலைபளு கூடும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: மறைமுக எதிர்ப்புகள் தோன்றினாலும் அவற்றை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்கள். திருவோணம்: எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் முயற்சி நிறைவேறும்.அவிட்டம் 1,2: எதிர்பார்த்ததை விட கூடுதல் வருமானம் உண்டாகும். நட்புகளால் நீண்டநாள் எண்ணம் பூர்த்தியாகும். 

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் ஆதாய நிலை ஏற்படும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள்.சதயம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானத்திற்காக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்தவற்றில் லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும்.

மீனம்

பூரட்டாதி 4: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பெரியோர் ஆதரவுடன் முயற்சியில் லாபம் காண்பீர்கள்.உத்திரட்டாதி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ரேவதி: பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும்.