தம்புள்ளை நகருக்குள் புகுந்த காட்டு யானைகள் : அச்சத்தில் மக்கள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

தம்புள்ளை நகருக்கு தற்செயலாக வந்த மூன்று காட்டு யானைகளை வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் விரட்டியதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 23ஆம் திகதி இரவு தம்புள்ளைக்கு வந்த மூன்று காட்டு யானைகளும் நேற்று (24.04) அதிகாலையில் வீடுகள் மற்றும் கடைகளில் சுற்றித் திரிந்தன.
பின்னர், வனவிலங்கு அதிகாரிகள், தம்புள்ளை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் உதவியுடன் காட்டு யானைகள் தங்கியிருந்த இடத்திலிருந்து கிராலாவ, மரகெல்ல காப்புக்காட்டுக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.



