தனுசு ராசிக்காரர்கள் எதிர்கால நலனை ஒட்டி ஒரு முயற்சி மேற்கொள்வீர்கள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 week ago
தனுசு ராசிக்காரர்கள் எதிர்கால நலனை ஒட்டி ஒரு முயற்சி மேற்கொள்வீர்கள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நீங்கள் ஈடுபடும் செயல்களில் லாபநிலை உண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பரணி: வழக்கமான செயல்கள் வெற்றியாகும். கூட்டுத் தொழிலில் இருந்து லாபம் வந்துசேரும். கார்த்திகை 1: தம்பதி இடையே இருந்த பிரச்னை விலகும். பிறரை நம்பி எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உடல்நிலை சீராகும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வரும்.ரோகிணி: விரும்பிய வகையில் செயல்பட்டு மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியே நன்மைகள் அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். தொழிலில் உண்டான தடைகள் விலகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மனதில் இருந்த குழப்பம் விலகும். திருவாதிரை: வியாபாரத்தில் வேலை ஆட்களை மாற்றுவீர்கள். வருமானத்தில் இருந்த தடை அகலும். புனர்பூசம் 1,2,3: மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள்.

கடகம்

புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற வரவு உண்டாகும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.பூசம்: உங்கள் முயற்சி அனுகூலமாகும். விலகிச்சென்ற உறவுகள் உங்களைத்தேடி வருவார்கள். ஆயில்யம்: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தைக் காண்பீர்கள். ஆடம்பர செலவுகள் செய்து மகிழ்வீர்கள்.

சிம்மம்

மகம்: நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவரை இன்று சந்திப்பீர்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். பூரம்: வியாபாரத்தின் நுணுக்கம் அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும்.உத்திரம் 1: தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்டநாள் முயற்சி ஒன்று வெற்றியாகும். 

கன்னி

உத்திரம் 2,3,4: குடும்பத்தில் சொத்துப் பிரச்னை ஏற்படும். நீங்கள் ஈடுபடும் செயல்கள் லாபமாகும். அஸ்தம்: உங்கள் சுய ஆற்றல் இன்று வெளிப்படும். துணிச்சலாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.சித்திரை 1,2: எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர். 

துலாம்

சித்திரை 3,4: கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். சுவாதி: தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விசாகம் 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வந்துசேரும். 

விருச்சிகம்

விசாகம் 4: மனதில் தேவையற்ற சிந்தனைகள் உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். அனுஷம்: சிலர் உங்களைக் குறை சொல்வார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டாம். கேட்டை: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விரும்பிய பொருட்கள் வாங்குவீர்கள். 

தனுசு

மூலம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் ஆதாயம் அதிகரிக்கும். உங்கள் நிலை உயரும். பூராடம்: அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்கால நலனை ஒட்டி ஒரு முயற்சி மேற்கொள்வீர்கள். உத்திராடம் 1: கேளிக்கை, சந்தோஷம் என்று செலவுகள் செய்வீர்கள். நட்புகளால் ஆதாய பாதை தெரியும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருவோணம்: உங்கள் செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். புதிய பொறுப்பு உங்களை வந்து சேரும். அவிட்டம் 1,2: வியாபாரத்தை விருத்தி செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தினர் ஒத்துழைப்பு உண்டாகும். 

கும்பம்

அவிட்டம் 3,4: பொது நலனில் கவனம் செல்லும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். சதயம்: வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்களுடன் ஒரு முயற்சியை மேற்கொள்வீர்கள். பூரட்டாதி 1,2,3: பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள். தந்தை வழி உறவினரால் உங்கள் செயல் வெற்றியாகும். 

மீனம்

பூரட்டாதி 4: நேற்றுவரை உங்கள் செயல்களில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும்.உத்திரட்டாதி: மனதில் இருந்த பயம் விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். ரேவதி: எதிர்பாராத சங்கடங்களும் மனதில் குழப்பமும் ஏற்படும். விழிப்புணர்வு அவசியம்.