தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்திச் சென்ற முதியவர் உயிரிழப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பெங்களூர் மாநிலத்தைச் சேர்ந்த 31 பேர் கொண்ட குழுவானதுநேற்று (23.04) ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் இருந்து தலைமன்னாருக்கு படகு மூலம் சென்று இன்று அதிகாலை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து கொண்டிருந்தபோது 76 வயது உடைய முதியவர் கோபால் ராவ் நீந்த தொடங்கிய 3 மணி நேரத்திலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு படகில் ஏறிய போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை அடுத்து அவரது உடலை தனுஷ்கோடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் கடலில் நீந்தி வந்த முதியவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சக நீச்சல் வீரர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



