இந்திய மக்களவைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் மாபெரும் தேர்தல் : வாக்குபதிவுகள் ஆரம்பம்!

#India #SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
இந்திய மக்களவைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும்  மாபெரும் தேர்தல் : வாக்குபதிவுகள் ஆரம்பம்!

இந்தியாவில் மக்களவை தேர்தல் இன்று (19.04) ஆரம்பமாகியுள்ளது. சுமார் 07 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் ஜுன் மாதம் முதலாம் திகதிவரை இடம்பெறவுள்ளது. 

அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் வாக்குபதிவு தொடங்கியுள்ளது.

வாக்குபதிவுகள் காலை 07 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், மாலை 06 மணியுடன் நிறைவடையவுள்ளன. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை ஆற்றிவருகின்றனர். 

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்ளை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!