சிம்ம ராசியினர் சங்கடங்கள் மற்றும் தடுமாற்றத்தை சந்திப்பீர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 weeks ago
சிம்ம ராசியினர் சங்கடங்கள் மற்றும் தடுமாற்றத்தை சந்திப்பீர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: திட்டமிட்டிருந்த செயலில் மாற்றம் செய்வீர்கள். வியாபாரத்தில் அக்கறை காட்டுவீர்கள். பரணி: தள்ளிப்போன முயற்சிகள் இன்று நிறைவேறும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.கார்த்திகை 1: உங்கள் செயல்களில் குறை கூறியவர்கள் மாற்றம் அடைவார்கள். வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் முயற்சிகளுக்கு சூழ்நிலைகள் சாதகமாகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். ரோகிணி: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள். மறைமுகமாக தொல்லை அளித்தவர்கள் விலகுவர். மிருகசீரிடம் 1,2: உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். நினைத்ததை சாதிப்பீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் வரும். முயற்சிகள் லாபமாகும்.திருவாதிரை: வேலைத் தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். வருவாய் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: நண்பர்கள் உதவியுடன் செயலில் லாபம் காண்பீர்கள். கடன்கள் அடைபடும்.

கடகம்

புனர்பூசம் 4: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்கள். பூசம்: சிக்கல்களை சந்தித்தாலும் உங்கள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.ஆயில்யம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: மதியம்வரை நெருக்கடிகள் இருக்கும். தேவையற்ற செலவுகள் தோன்றும். அதன்பின் நிலைமை சீராகும். பூரம்: மதியத்திற்குமேல் மனதில் குழப்பம் வந்து நீங்கும். பயணத்தில் சில சங்கடங்கள் தோன்றும். உத்திரம் 1: செயல்களில் தடுமாற்றத்தை சந்திப்பீர்கள். எதிர்பாராத நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும்.அஸ்தம்: தொழிலில் இருந்த தடைகள் விலகும். இழுபறியாக இருந்த ஒரு பிரச்னை முடிவிற்கு வரும்.சித்திரை 1,2: நீண்ட நாட்களாக நீங்கள் மேற்கொண்டு வந்த முயற்சியில் இன்று உங்களுக்கு சாதகம் உண்டாகும்.

துலாம்

சித்திரை 3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சுவாதி: வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். விசாகம் 1,2,3: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். 

விருச்சிகம்

விசாகம் 4: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். தொழிலை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர்கள். அனுஷம்: போட்டிகளை சமாளித்து வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மையாகும்.கேட்டை: உங்கள் முன்னேற்றத்தை தடுக்க முயன்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் மாற்றத்தை சந்திப்பீர்கள்.

தனுசு

மூலம்: வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். உறவுகளுடன் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.பூராடம்: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் விருப்பம் நிறைவேறும். நேற்றுவரை இருந்த பிரச்னைகள் நீங்கும்.உத்திராடம் 1: எதிர்பாராத நெருக்கடிகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

மகரம்

உத்திராடம் 2,3,4: மதியத்திற்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் பேச்சில் எச்சரிக்கை அவசியம்.திருவோணம்: பணவரவில் தடைகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து நினைத்ததை அடைவீர்கள்.அவிட்டம் 1,2: கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. நண்பர்களால் சில சங்கடங்கள் உண்டாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: தொழில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பண வரவு அதிகரிக்கும்.சதயம்: ஆரோக்கியம் சீராகும். உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.உத்திரட்டாதி: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவர். ரேவதி: நண்பர்களுடன் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.