துறவற வாழ்விற்காக முழு சொத்துக்களையும் இழந்த இந்தியர்கள்!
#India
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
துறவற வாழ்வில் பிரவேசிப்பதற்காக முழு செல்வத்தையும் தியாகம் செய்த தம்பதிகள் பற்றிய செய்தியொன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் குஜராத்தில் ஜைன மதத்தை பின்பற்றும் தம்பதியரே இந்த முடிவை எடுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர்கள் மக்களுக்கு பகிர்ந்தளித்த சொத்து மதிப்பு சுமார் 200 கோடி இந்திய ரூபாய்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் தமது செல்வங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும், ஏப்ரல் மாத இறுதியில் துறவற வாழ்வில் பிரவேசிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.