காலி மாவட்டத்தின் பிரதான வீதிகளில் எண்ணெய் கசிவு : பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
காலி மாவட்டத்தின் பல பிரதான வீதிகளில் ஒருவித எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக வீதி விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, பத்தேகம சந்தரவல ஊடாக பாண்டுரப லபுதுவ வீதியில் பல இடங்களில் எண்ணெய் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலி மாபலகம பிரதான வீதியில் உள்ள தல்கசாய, ஓவிலானை, ஹட்டன் கடே, கொடமுலன சந்தி, வலிதெனிய பாடசாலை, போவிட்டிய முல்லை, யதலமத்த பாடசாலை, நாகொட கிராமிய வைத்தியசாலை ஆகிய பகுதிகளிலும் இதே வகை எண்ணெய் காணப்படுகின்றது.
வெப்பமான காலநிலை காரணமாக, எண்ணெய் கசிந்த சாலைகள் பகலில் அதிக வழுக்கும் என்றும் இதன் காரணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.