காஸா சிறுவர்களுக்கு நிவாரணம் வழங்க நிதியம்: அமைச்சரவை அங்கீகாரம்
#SriLanka
#Sri Lanka President
#Gaza
Mayoorikka
1 year ago

காஸா சிறுவர் நிதியம்' ஒன்றை உருவாக்குவதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
காஸா வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்த நிதியம் உருவாக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், இப்தார் கொண்டாட்டங்களை கைவிட்டு இந்த நிதிக்கு பங்களிக்குமாறு அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடிமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, இலங்கை அரசாங்கத்தின் 1 மில்லியன் டொலர் நன்கொடையானது, ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக வழங்கப்படவுள்ளது.



