லிந்துலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாணவர் ஒருவர் உயிரிழப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேன பிரதேசத்தில் ஆக்ரா ஓயாவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
05 சிறுவர்களுடன் நீராடச் சென்ற குறித்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவரின் சடலம் ஓடையின் ஆழமான பள்ளத்தாக்கில் இனங்காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியாவைச் சேர்ந்த தினுக கமகே என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.