பாடசாலை மாணவர்களுக்கு விசேட புலமை பரிசில் திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு!

#SriLanka #students #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பாடசாலை மாணவர்களுக்கு விசேட புலமை பரிசில் திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

 இலங்கையிலுள்ள 10,126 பாடசாலைகளை உள்ளடக்கிய முதலாம் தரத்திலிருந்து 11 ஆம் தரம் வரையிலான 100,000 பிள்ளைகளுக்கு இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.  

இதன்படி, இந்த முழு வேலைத்திட்டத்திற்கும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து 3,600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதிலும் போக்குவரத்து வசதிகளை வழங்குவதிலும் உள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு ஓரளவு ஆறுதல் அளிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். 

இதன்படி, இந்த புலமைப்பரிசில் பெறுவோரை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான அனைத்து தகவல்களும் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!