மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

மியன்மாரின் மியாவாட் பகுதியில் சிறை வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை விடுவிப்பது தொடர்பாக மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவரை சந்தித்து கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் யு.எல்.முகமது ஜௌஹர் தெரிவித்தார்.
அவர்களை மீட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு உடனடி ஆதரவு வழங்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையர்களை மீட்பதற்காக மியன்மார் அரசாங்கம் சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்டு, தீவுக்கு அழைத்து வர உதவுவதாக கூறி, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் பணம் பறிக்கும் பணியில் சிலர் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, குறித்த இலங்கையர்களை மீட்பதற்காக தலையிடுமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மியன்மார் பிரதிப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.



