உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் கொழும்பு வந்தடைந்தது!

மெத்தனால் மூலம் இயங்கும் உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் நேற்று (24.02) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
"அன்னி மெர்ஸ்க்" என்ற சரக்குக் கப்பல் 16,000க்கும் அதிகமான கொள்கலன் கொள்ளளவைக் கொண்டுள்ளது. Maersk இன் முதல் மெத்தனால் கப்பல் "Annie Maersk" ஆகும். இந்த கப்பல் முதல் முறையாக ஜனவரி 26 அன்று பொதுப் போக்குவரத்தில் இணைந்தது.
சுற்றுச்சூழலில் கந்தகம் மற்றும் கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுவதால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்க மெத்தனால் அந்த கப்பல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது,
தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல், டேனிஷ் கொடியுடன் சர்வதேச கடல் பகுதியில் பயணிக்கிறது.
இந்தக் கப்பல் 350 மீட்டர் நீளமும் 53.5 மீட்டர் அகலமும் கொண்டது. "Annie Maersk" என்ற கப்பல் மொத்த கொள்ளளவு 190,000 டன்கள் மற்றும் 10 கொள்கலன் பெர்த்களைக் கொண்டுள்ளது.



